மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சரோஜினி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த ராஜன் மற்றும் அஜித்குமார் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.