மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரிஷி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முது ரிஷி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவ்வழியாக வந்த டிராக்டர் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்து ரிஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டரை ஓட்டிச்சென்ற ராஜேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.