மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியில் கேசவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர்-பாகலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வேன் இவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.