நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் திருமால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று திருமால் மற்றும் சரவணன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் திருமால் மற்றும் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருமால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் சரவணனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.