Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற தம்பதியினர்…. கடைசி நிமிட பயணம்…. நடந்த துயர சம்பவம்….!!

ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் என்ற இடத்தில் வரும்போது, திடீரென இவர்களது மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த படாளம் போலீசார் விரைந்து வந்து அவர்களின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |