மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பின் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் காவல் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.