மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் லெவல் கிராசிங் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியை இவர்கள் முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு வாலிபர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத் மற்றும் சுரேசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.