Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழச்சேரி பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சாம்ராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகு சாம்ராஜிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த பாலத்தில் இரண்டு குழிகள் இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் இருக்கும் குழிகளை சரிசெய்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |