உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு வாடிக்கையாளர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன. வீட்டில் இருந்து கொண்டு அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். சிலர் உணவுகளையும் சோமடோ, ஸ்விகி போற்ற உணவு வழங்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து கொள்கின்றனர்.
அப்படி ஹைதராபாத்தை சேர்ந்த அகில் முகமது என்ற இளைஞர் பிடெக் படித்து வரும் நிலையில், குடும்பத்தின் வறுமை காரணமாக சோமடோவில் டெலிவரி பாயாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முகேஷ் என்பவர் ஆடர் செய்த உணவை பலத்த மழை பெய்த போதும் 12 நிமிடங்களில் ஒன்பது கிலோமீட்டர் கடந்து சென்று டெலிவரி செய்துள்ளார். இதில் நெகிழ்ச்சி அடைந்த அவர் அகிலுக்கு உதவுவதற்காக பேஸ்புக்கில் நிதி திரட்டி டிவிஎஸ் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.