புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்தார். இவர் கீரனூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் புறவழிச் சாலையையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து அறந்தாங்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஷாஜகான் தூக்கி விசப்பட்டார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.