செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மோகன்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் மாமல்லபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் கலைவாணனுடன் தாம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மனமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோகன்பாபு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தில் இறந்த மோகன்பாபுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.