பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாண்டாம்பாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முருங்கைக்காய் கொள்முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி கந்தசாமி பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று ராமசாமி பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வெள்ளகோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமசாமியின் உடலை உடனடியாக கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.