மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமபட்டினம் பகுதியில் மீன் வியாபாரியான முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற மினி லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். மேலும் மினி லாரியும் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முகமது, கோபிகா மற்றும் மினி லாரியில் பயணம் செய்த மணிகண்டன், ராஜேந்திரன், சண்முகம் ஆகிய 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகமது பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.