நடிகை அஞ்சலி பைக் ஓட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை அஞ்சலி கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது . இதையடுத்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘அங்காடி’ தெரு படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இதைத்தொடர்ந்து எங்கேயும் எப்போதும் ,இறைவி, தரமணி, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . கடந்த வருடம் இவர் நடிப்பில் நிசப்தம், நாடோடிகள் 2 ,பாவக் கதைகள் ஆகிய படங்கள் வெளியானது . தற்போது இவர் தமிழ் ,தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது வீட்டு வாசலில் யமஹா பைக் ஓட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எங்களுக்கு லிப்ட் கிடைக்குமா ? என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.