சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.
வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய வாகனங்களில் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுவது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மளிகை பொருட்கள் மற்றும் பிற தேவைகளுக்கு மக்கள் வெளியே வந்தால் நிச்சயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றை குறைக்க வேண்டும் என்றால் இது போல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்ற ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளதால் சென்னை மாநகராட்சி தற்போது நடைமுறைப்படுத்த உள்ளது. அனைவருமே முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அதே போல வாகனங்களில் செல்பவர்களும் முகக்கவசம் அறிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வாகன அனுமதிச் சீட்டு உடனடியாக ரத்து செய்வதோடு, வாகனங்களும் மூன்று மாதத்திற்கு பிறகுதான் திருப்பி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.