Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக் திருடும் இளைஞர்… காட்டி கொடுத்த சிசிடிவி.. போலீஸ் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

Image result for பைக் திருடன்

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை திருடி சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் புதுசேரி காவல்துறை அந்த இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |