பிரிட்டன் தடுப்பூசியையும்,ரஷ்யா தடுப்பூசியையும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்
பிரிட்டன் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசியையும், ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வில், 2 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி 92% பாதுகாக்கும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
16,500 பேருக்கு செலுத்தப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியில் இதுவரை எவருக்கும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் மருத்துவமனையிலும் கூட அனுமதிக்கப்பட வில்லை. ஆகையால் ஸ்புட்னிக் தடுப்பூசியும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராஜனாக தடுப்பூசியும் சேர்த்துக் கொடுக்கும் போது நல்ல பலன் உண்டாகும் என்று ரஷ்ய ஆய்வாளர் கிரில் டிமிட்ரியெவ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இணைத்து செயல்படுத்திய பிறகு இதுகுறித்து பிரிட்டனிடம் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.