கொரோனா பரவலுக்கான கடுமையான நிலை, வரும் 2020 வருடத்திற்குள் முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் கணித்திருக்கிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தன் இணையதள பக்கத்தில் கொரோனா நிலை தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். அதில், கொரோனா பரவலின் நிலை குறித்து, ஒரு கணிப்பை குறிப்பிடுவது என்பது முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், கொரோனா பரவலின் கடுமையான நிலை அடுத்த வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தன் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான, மறக்க முடியாத வருடமாக 2021 அமைந்துவிட்டது என்று கூறிய பில்கேட்ஸ், தற்போது, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் குறித்து, தன் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
எனினும், ஒமிக்ரான் மாறுபாட்டை கண்டறிந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டால், சிறிய அறிகுறிகள் தான் தோன்றும் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.