கிரிப்டோ கரன்சியில் தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்து பில் கேட்ஸ் பதிலளித்திருக்கிறார்.
உலக நாடுகள் முழுக்க கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பார்க்க முடியாது மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியாது, டிஜிட்டல் வடிவம் கொண்டது. அதே சமயத்தில் டாட், சோல், இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டெதர், கார்டனோ, த்தேரியம், என்னும் இந்த கிரிப்டோகரன்சிக்கான பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது.
இதனால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து அதிகமான லாபத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உள்ள பில்கேட்ஸ் தற்போது வரை கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் அவர் தெரிவித்ததாவது, “நான் எப்போதும் நல்ல மதிப்பு மற்றும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடிய விஷயங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புவேன். ஒரு நிறுவனமானது எந்த அளவிற்கு சிறப்பான தயாரிப்புகளை கொண்டு வருகிறது என்பதை பொறுத்து தான் அதன் மதிப்பும் உயரும்.
ஆனால் கிரிப்டோகரன்சி மதிப்பானது, பிறர் அதனை வாங்கக்கூடிய அளவை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தான் பிற முதலீடுகளை போன்று கிரிப்டோவில் முதலீடு செய்ய நான் ஆர்வம் காட்டவில்லை. தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருக்க இதுவே காரணம் என்று கூறியிருக்கிறார்.