உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியை நிறுத்த அதிபர் உத்தரவிட்டது ஆபத்தானது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முன்னதாகவே உலக நாடுகளை எச்சரிக்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
Halting funding for the World Health Organization during a world health crisis is as dangerous as it sounds. Their work is slowing the spread of COVID-19 and if that work is stopped no other organization can replace them. The world needs @WHO now more than ever.
— Bill Gates (@BillGates) April 15, 2020
இந்நிலையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்சும் அதிபரின் முடிவிற்கு கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் “நெருக்கடியான சூழலின் போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். கொரோனா பரவுவதை அவர்களது செயல்களே குறைத்து வருகிறது. அது நிறுத்தப்பட்டால் வேறு எந்த அமைப்பாலும் அதற்கு ஈடாக இருக்க முடியாது. இப்போதைய சூழலில் உலக சுகாதார அமைப்பின் தேவை மிகவும் அவசியமான ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.