Categories
அரசியல் மாநில செய்திகள்

”பில்” ரெடி ஆகிட்டு இருக்கு… ஒருநாள் Excel Sheetல வரும்.. அண்ணாமலையை துரத்தும் செந்தில்பாலாஜி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசி என்ன சொன்னோம் என்றால்,  வீடு வாரிய கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்கள் நியமனம் செய்யணும். அந்த பணியாளர்கள் நியமனம் செய்தால் மாதாந்திர கணக்கிடை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு  வசதியாக இருக்கும். இப்போ ரெண்டு மாசத்திற்கு ஒரு தடவை கணக்கு எடுக்கக்கூடிய அளவிற்கு தான் பணியாளர்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பணியாளர்களை நியமனம் செஞ்சுட்டா ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய நடைமுறை பயனுள்ளதாக இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் போடக்கூடிய பணிகள் நாம இப்ப தொடங்கி இருக்கிறோம்.  விரைவில் டெண்டர் போட இருக்கிறோம் . அந்தப் பணிகள் நடைபெறுகின்ற பொழுது கணக்கெடுக்க கூடியவர்களை நாம வேலைவாய்ப்பில் இருந்து எடுத்துட்டோம்னா…

இது இரண்டு வருடத்திற்குள் முடிகிறது ஸ்மார்ட் மீட்டர் அப்படின்னு வச்சிக்கிட்டீங்கன்னா… அதற்கு பிறகு அவங்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது ? என்ன வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் ?  அதற்காக ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் விடக்கூடிய பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

ஒரே ஒரு கேள்வி.. நீங்க கேட்டதுனால சொல்ற முடிஞ்சா… இன்னைக்கு சாயங்காலத்திற்குள்ள அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிடனும். எந்த கடையில வாங்குன ? எந்த விலைக்கு வாங்குன ?  நீ  கேஷ் கொடுத்து வாங்கி இருந்தா ?  உன் அக்கௌன்ட்ல பணமாக நீ எடுத்து இருக்கணும் இல்ல நீ அக்கவுண்ட்ல இருந்து பணமா கொடுத்து இருந்தினா…  அதுக்கான எவிடென்ஸையும் நீ வெளியிடனும், அந்த ரசிதையும் கொடுக்கணும்.

நீ அக்கவுண்ட்ல இருந்து எடுத்தியா ? இல்லையா என்று தெரியவில்லை.  யாரோ கொடுத்தது…  யார்கிட்டயோ…  வெகுமதி வாங்கினது. அதனால வெளியிட முடியவில்லை. இப்ப பில்லு தயாராகிட்டு இருக்கு,  என்னைக்காவது ஒரு நாள் எக்ஸ்.எல் சீட்ல வரும். வரும்போது அதற்கான விளக்கங்கள் நான் சொல்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |