Categories
உலக செய்திகள்

ரூபாய் 4600 கோடி செலவில் சொகுசு கப்பல் வாங்கிய பில்கேட்ஸ்

உலக அளவில் இரண்டாவது பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மிகச்சிறந்த திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார்.

உலக அளவில் பணக்காரரான பில்கேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலகின் ஆரோக்கியத்திற்காகவும் தான் வைத்திருக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்யும் மனம் கொண்டவர்.  இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பசுமையாக உருவாக்கப்படும் சொகுசு கப்பலை வாங்குவதில் ஆர்வம் கொண்டு ரூபாய் 4600 கோடி செலவு செய்துள்ளார்.

 

 

கப்பலின் சிறப்பம்சங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பலில் சிறப்பம்சங்கள்

  • முற்றிலும் திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கப்பல்
  • கப்பலின் நீளம் சுமார் 367 அடி
  • தொழில்நுட்ப மட்டுமல்லாது அழகியல் சார்ந்தும் கப்பலை வடிவமைத்துள்ளனர்
  • ஐந்து தலங்களை கொண்டுள்ளது அந்த சொகுசு கப்பல்
  • 2 விஐபி ஸ்டே ரூம்
  • 14 இரட்டை குழு அறைகள்
  • இரண்டு அதிகாரிகள் அறைகள்
  • ஒரு கேப்டன் அறை
  • உடற்பயிற்சி கூடம்
  • ஹைட்ரோ மசாஜ் அறை
  • யோகா ஸ்டூடியோ
  • நீச்சல் குளம்
  • ஆரோக்கியம் மையம்
  • வட்ட வடிவமைப்பிலான படிக்கட்டுகள்

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட சொகுசு கப்பல் 2024 ஆம் ஆண்டு கடலுக்குள் செல்லும் எனவும் கூறப்படுகிறது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |