மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில்கேட்ஸ் தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
அமெரிக்கா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த மே மாதத்தில் அறிவித்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கானது கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சிஎன்என் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பில்கேட்ஸ் தம்பதியினர் கூறுகையில் கடந்த 27 ஆண்டு திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம் என்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் அறக்கட்டளை பணியை தொடர்ந்து இணைந்து இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது திருமண வாழ்வில் இணைந்து வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.