தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில் அதில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் தான் நடிக்க உள்ளதாக தகவல் விளையாட நிலையில் அதைப்பற்றி முதன் முறையாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். நடராஜனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறிய அவர், சரியான நேரம் வரும்போது படம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடராஜனின் வாழ்க்கை படத்தில் நடிக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.