கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சாருதத். இவர் ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர். குறிப்பாக இலை ஓவியங்கள் வரைந்த அசத்துவதில் அதிக திறமைகள் வாய்ந்தவராக இருக்கிறார். இந்நிலையில் கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து வீரர்களின் ஓவியத்தை இலையில் வரைந்து சாருதத் அசத்துகிறார்.
இதுகுறித்து சாருதத் பேட்டியில் கூறியதாவது, எனக்கு இலையில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தற்போது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் கால்பந்து வீரர்களின் ஓவியங்களை இலையில் வரையலாம் என்று நினைத்து நான் வரைந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் கேரளாவில் இலை ஓவியங்களை வரைபவர்களுக்காக தனியாக சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.