பிரிட்டனில் சுமார் 150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக எகிப்தின் பிணந்தின்னிக் கழுகு தென்பட்டிருப்பது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.
பறவை ஆர்வலர்கள், நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த அதிசய பறவையை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். பிரிட்டனில் இருக்கும் Isles of Scilly என்ற தீவிற்கு பிரான்ஸில் இருந்து இந்த பறவை வந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் Exeter என்ற பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக இருக்கும் Stuart Bearhop என்பவர் கூறுகையில், இந்த கழுகானது, கடந்த 1868 ஆம் வருடத்திற்கு பின்பு இப்போது தான் முதன் முதலாக காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது இந்த கழுகானது, கடந்த 1825 ஆம் வருடத்தில் ஒரு தடவை காணப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த 1868 ம் வருடத்தில் ஒரு தடவை தான் தென்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.