பறவை காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாமக்கல் முட்டை விலை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் பறவை காய்ச்சலால் அலட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் முட்டைகள் தேக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியதில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படவில்லை. இதனால் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிந்து உள்ள காரணத்தினால் அதன் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு முட்டையின் விலை ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் முட்டைகளின் தேகத்தின் காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் அதன் விலை 50 காசுகள் சரிந்து 4.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னையிலும் முட்டை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.