கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே ஏழு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டதோடு ஒவ்வொரு சோதனை சாவடியிலும், ஒரு கால்நடை மருத்துவர் உட்பட மூன்று பேர் இருக்கின்றனர்.