Categories
மாநில செய்திகள்

“பறவைக் காய்ச்சல் எதிரொலி” கேரளா – தமிழகம் எல்லை கண்காணிப்பு…!!

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது.

இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, இறைச்சி உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது . தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளா, தமிழகம் எல்லையில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |