Categories
மாநில செய்திகள்

“பறவைக்காய்ச்சல் எதிரொலி” மீண்டும் குறைந்த…. முட்டை & கறிக்கோழியின் விலை…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை சரிவடைந்துள்ளது.

கொரோனா பரவளிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் கேரளா மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன. பறவைக் காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசே கோழி மற்றும் வாத்துகளை கொன்று வருகிறது. மேலும் இந்த பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று கூறப்படுகிறது. எனவே கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி ,முட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அங்கிருந்து வரும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாமக்கலில் முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை சரிவடைந்துள்ளது. நாமக்கல்  பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் குறைந்து 4.60 விலைக்கும், ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.6 குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 14 ரூபாய் விலை குறைந்த நிலையில் இரண்டு நாட்களில் 20 ரூபாய் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |