கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் எனும் நோய் பாதிக்க வாய்ப்பு மிகக் குறைவு இருப்பினும் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். முட்டை பழங்கள் மற்றும் கோழிகள் ஆகியவை கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் போது தமிழக எல்லையில் கிருமிநாசினி போன்றவை தெளிக்கப்பட்டு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன என சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்தபோதும், ஏர்வாடி தர்காவிற்கு வரும் பக்தர்கள் எந்தவித பரிசோதனையும் இல்லாமல் வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்வாடியில் சிறப்பு பிரார்த்தனை மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களே வைத்த நிலையில் தற்போது இந்நிலை அச்சபட கூடியதாய் உள்ளது. இதேபோல நாட்டுக்கோழி, ஜப்பான் காடை பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், காடைகள் கோழிகள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.