Categories
உலக செய்திகள்

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ…. கட்டுக்குள் கொண்டுவர முயற்சி…. உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில நாட்களாகவே காட்டுத் தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆனால் அப்பகுதி  முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளத்தால் தீயணைக்கும் பணியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Okanagan பகுதியில் காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் காற்றானது மணிக்கு 6 கி. மீ வேகத்தில் வீசுவதால் பல பகுதிகளுக்கும் காட்டுத்தீயானது பரவி கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது. அதன் காரணமாகவே அப்பகுதியில் வசிக்கும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |