Categories
உலக செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு…. எந்த நாட்டில்?… வெளியான தகவல்…!!!

ஜப்பானில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 4.9% குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஜப்பான் அரசு, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு மானியங்களை அதிகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எனினும் பிறப்பு விகிதமானது தொடர்ந்து சரிவடைந்து கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். குறைவான பிறப்பு விகிதமும், மக்கள்தொகை வீழ்ச்சி அடைவதும் நாட்டின் தேசிய வலிமையை பாதிக்கும் காரணங்களாக உள்ளன என்று அரசு தேர்ந்தெடுத்த ஒரு குழுவானது கடந்த வாரத்தில் பிரதமரிடம் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

Categories

Tech |