தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்ச பட்டியல் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் புதிய கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசை விமர்சனம் செய்து பல்வேறு கேள்விகளையும் முன்வைத்து வருகின்றார். தமிழகத்தில் எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பட்டியலாக தயாரித்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் “பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையிலிருக்கும் லஞ்ச பட்டியல் இது.” இதனை தமிழக அரசால் மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் pic.twitter.com/hJLpQ1XG9s
— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2020