தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதல் முதலாக அஜித்தின் ஏகன் படத்தில் அறிமுகமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் மதன் அவர்கள் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆடி ஷோரூம் வருமாறு கூறியிருக்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் சென்று பார்த்தபோது மதன் ஆடிகார் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசை பற்றி மதனிடம் சிவகார்த்திகேயன் கேட்டபோது, இது கிப்ட் அல்ல “வெற்றியின் சின்னம்” என்று வைத்துக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதைப் பாருங்கள் உங்களுக்கு நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பது தெரியவரும் என்று மதன் அவரிடம் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் சின்ன வயது கனவு காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது தான். ஏனென்றால் அவருடைய தந்தையும் ஒரு காவல்துறை அதிகாரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் 5 லட்ச ரூபாய் பணத்தை விளையாடி வென்ற போது அதை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்தாமல் மூன்று குழந்தைகளின் படிப்பிற்காக செலவழித்துள்ளார். இது அவருடைய நல்லெண்ணத்தையும் வெளிபடுத்துகிறது. சிவகார்த்திகேயன் கராத்தேவில் “பிளாக் பெல்ட்” வாங்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கும் விஜய் டிவி ஆங்கர் டிடி-க்கும் ஒரே நாள்தான் பிறந்தநாள்.
சிவகார்த்திகேயன் அவருடைய அம்மாவிற்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அது “அம்மா எந்த பெண்ணை கல்யாணம் பண்ண சொல்கிறார்களோ அதை நான் பண்ணுவேன்” என்று அவருடைய அம்மாவிடம் சிவா கூறியிருக்கிறார். ஒருநாள் சிவகார்த்திகேயனின் அம்மா அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்யாணத்திற்கு பெண்ணை பார்த்து விட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு மறுப்பு சொல்லாம சிவகார்த்திகேயன் கல்யாணம் பண்ணிக்கொண்டாராம்.
மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் ராயபுரம் பீட்டர் என்ற பாடலை பாடியுள்ளார். ஆனால் அதில் தெரியாத ரகசியம் என்னவென்றால் அந்த பாடல் ரெக்கார்டிங் பண்ணும்போது சிவகார்த்திகேயன் சென்னையிலும் அனிருத் பாம்பேயிலும் இருந்திருக்கிறார்கள். ஸ்கைப் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டிய அனிருத் அதனை சரிசெய்து சிவகார்த்திகேயன் இந்தப் பாடலை முடித்துள்ளார்.
விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக கோபிக்கு கிடைத்திருந்த “பெஸ்ட் ஆங்கர் அவார்டு” சிவகார்த்திகேயன் களமிறங்கிய முதல் வருடத்திலேயே அவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து தன்னிடமுள்ள தன்னம்பிக்கை மூலம் வசூல் மன்னனாக மாறியிருக்கும் சிவாவிற்கு எதிர்காலம் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.