செர்ரி கேக் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்ணெய் – 100 கிராம்
சீனி -100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
செர்ரி – 150 கிராம் பால் – 2 மேஜைக்கரண்டி
மைதா – 200 கிராம்
எலுமிச்ச பழத்தோல் – சிறிதளவு (பொடியாக நறுக்கியது )
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் மைதா மாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து நன்கு சலிக்கவும். செர்ரி பழத்தில் உள்ள கொட்டை நீக்கி சீறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இரண்டாவதாக கடாயில் வெண்ணெய், சீனி, எலுமிச்சம் பழத்தோல் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
மூன்றில் ஒரு பங்கு கலந்து வைத்த மைதா மாவை, இக்கலவையுடன் சேர்க்கவும். மேலும் அதனுடன் பாதியாக நறுக்கி வைத்த செரியை மாவில் புரட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
ஓவனில் உள்ள பாத்திரத்தில் எண்ணெயை தடவி, அதனுடன் கேக் கலவையை அதில் ஊற்றி 350 டிகிரியில் 1/4 மணி நேரம் வேக வைத்து எடுத்தால் சுவையான செர்ரி கேக் ரெடி. செர்ரி பழத்தினால் அலங்கரித்து கொள்ளலாம்.