Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் வைத்து…. வாலிபர்கள் செய்த செயல்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்திற்கு சில வாலிபர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் கேக்கை பட்டா கத்தியினால் வெட்டிய பிறகு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வேப்பந்தட்டை பகுதியில் வசிக்கும் ஹரியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரி, அவரது நண்பர்கள் சூர்யா மற்றும் ஜனா ஆகியோரை கைது செய்துள்ளனர். அதோடு காவல்துறையினர் தப்பி ஓடிய பிரபாகரன் என்ற வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |