பிறந்த நாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்த செய்தி தொகுப்பு.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 1981_ஆம் ஆண்டு 14_ஆம் தேதி அன்று பிறந்தார். தீபக் கம்பீர் மற்றும் சீமா கம்பீர் ஆகிய தம்பதிக்கு மகனாக புது டெல்லியில் பிறந்தார். இந்திய அணியின் தொடக்க இடதுகை ஆட்டக்காரராக ஒருநாள் , டெஸ்ட் மற்றும் இருவது ஓவர் என அனைத்து வடிவ பன்னாட்டு போட்டிகளியும் விளையாடியுள்ளார்.
அதே போல துவக்க வீரராக உள்ளூர்ப் போட்டிகளில் புது தில்லி அணிக்காகவும் களமிறங்கியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக விளையாடி வந்த கம்பீர் 2018_ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக விளையாடுகிறார்.
2003 ஆம் ஆண்டில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் போட்டிகளில் அறிமுகமாகிய கம்பீர் 2004-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தலைவராக இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
2007 ஐசிசி உலக இருபது20, 2011 உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதி போட்டிகளில் இந்திய அணி வென்று இரு உலகக் கோப்பையை பெற்றதில் இவரின் பங்களி மிக அதிகமாக இருந்தது.வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் டெஸ்ட் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து நூறுகளை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனையை கம்பீர் படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் பிராட்மன், தென்னாபிரிக்க வீரர் ஜாக் கலிஸ், பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர். பிராட்மன் ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர்.
தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் 300_க்கும் அதிகமான ரன் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை இவர் படைத்தார். ஏப்ரல் ,2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது. 2008 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் கிரிக்கெட் டெஸ்ட்போட்டி தரவரிசையில் முதலிடம் பெற்றார். இதே ஆண்டில் ஆண்டின் சிறந்த வீரர் விருதினையும் கம்பீர் பெற்றார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்துக்கள்.