சூப்பர் ஹிட் சீரியல் இயக்குனர் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பட்டிதொட்டியெங்கும் கலக்கி வரும் இந்த சீரியலை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் மற்றொரு பிரபல சீரியலான ராஜா ராணி சீரியலையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரவீன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
https://www.instagram.com/tv/CS1tje7ho8d/?utm_source=ig_embed&ig_rid=417c6f93-4b3d-443a-9ef3-86b6c9dd3647