பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தன் 57-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை பூஜாஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து சல்மான் கான் மற்றும் அவரது மருமகன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதற்கிடையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரே கலரில் ஆடை அணிந்திருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் விழாவுக்கு வந்த தன் முன்னாள் காதலியான நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு(62), சல்மான்கான் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.