நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
திரைத்துறையில் ஒரு சில நடிகர், நடிகைகள் கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான “சகோ” படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா தொற்றினால் ஏராளமான மக்கள் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கடினமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்கு போராடி வருகின்றனர். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்.”என்று கூறியுள்ளார். மேலும் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலைவாய்ப்பு பயிற்சி, மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற பல பணிகளை ஜாக்குலின் செய்ய உள்ளாராம்.