பிரிட்டனில், படுக்கையில் இருக்கும் வயதான பெண்ணிற்கு பிறந்தநாள் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் 88 வயதுடைய பெண்மணி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே, பிரிட்டனின் நலவாழ்வு மையம் அவரின் பிறந்தநாளிற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதாவது அந்த நல வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை படுக்கையுடன் ஒரு தோட்டத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அவருக்கு நேரடியாக காண்பித்தனர். மேலும் கேக் தயார் செய்து, அங்கேயே வெட்டி அவரை மகிழ்வித்துள்ளனர்.