பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறான்.
ராஜேஸ்வரி அன்று தன் வீட்டில் பிரியாணி அமைத்துள்ளார். பிறகு தன் பேரன் பேத்திகளை அழைத்து சாப்பாடு வழங்கியிருக்கிறார். ஆனால் பேரன் ராகேஷை மட்டும் சாப்பிட கூப்பிடவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கண்ணன் ராஜேஸ்வரியின் வீட்டில் பேரன் பேத்திகள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ராகேஷ் தன்னை மட்டும் பிரியாணி சாப்பிட ஏன் அழைக்கவில்லை என்று கூறி கண்ணனிடம் தகராறு செய்துள்ளார்.
இதனை ராஜேஸ்வரி தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராகேஷ் கோபத்தில் பாட்டி என்றும் கூட பாராமல் தார் சாலையில் தள்ளி தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார். தகவலறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரி சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.