தமிழ் ,மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிகர் ரஹ்மான் பிஸியாக நடித்து வருகிறார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ரஹ்மானுக்கு இந்த வருடம் உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளாராம். தற்போது நடிகர் ரஹ்மான் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் . அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா உதவியாளரான சுப்புராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடித்து வருகிறார் . இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது .
மேலும் அஹமத் இயக்கத்தில் அர்ஜுன், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஜனகனமன மற்றும் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களிலும் ரஹ்மான் நடித்து வருகிறார் . இவர் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்லஸ் ஜோசபின் ‘சமரா’ படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகிறது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடிகர் ரஹ்மான் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.