Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வெறிநாய்களின் வெறிச்செயல்” ஒரே நாளில்…. பெண்கள் உட்பட 14 நபர்கள் படுகாயம்…!!

கரூர் அருகே அட்டகாசம் செய்து வரும் வெறி நாய்களை விரட்டுவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சில நாட்களாகவே கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெறிநாய்கள் திடீரென நேற்று காலை முதல் மாலைக்குள்  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் என பெண்கள் உட்பட 14 பேரையும்,

வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள், நான்கு பசு மாடுகள் உட்பட பதிமூன்று கால்நடைகளையும் கடித்து குதறி காயப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களை விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து கூட்டமாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்துவரும் வெறி நாய்களை அப்புறப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை விராலிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |