பாகற்காய் கார குழம்பு செய்வது எப்படி…
தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 250 கிராம்
சின்னவெங்காயம் – 150 கிராம்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2
புளி – எலுமிச்சைப்பழ அளவு
நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 ½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 100 கிராம்
உப்பு – தேவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் – தேவையானஅளவு
செய்முறை:
முதலில் தேங்காய்த்துருவல், சீரகம், தக்காளியை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு , பாகற்காயை பொன்னிறமாக வதக்கி அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.பின் இதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அரைத்த விழுது மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பாகற்காய் கார குழம்பு தயார் !!!