கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது.
அதோடு இல்லாமல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமென்று மாநில பாஜகவினர் தெரிவித்த நிலையில் தற்போது அங்குள்ள 11 MLA_க்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநில அரசு நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 224. அதில் பாஜகவின் பலம் 105 , காங்கிரஸ் + மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பலம் 116 , மற்றவை 3 . தற்போது ராஜினாமாசெய்தவர்கள் 14 தற்போதைய காங்கிரஸ் பலம் 105. இதனால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.