தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்குப்பின் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். எந்த கட்சி அனுசரிக்கிறதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைக்கப்படும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், அதன் தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் திமுக-அதிமுக என்ற நிலை மாறி, திமுக-பாஜக என மாறி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.