Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை….. ட்ரெண்டாகும் JUSTICE HASHTAG….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதற்காக பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், மதங்களுக்கான திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டன. காரணம் மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிகம் பரவி விடும் என்பதற்காகவே. இந்த நிலையில் சமீபத்தில் கூட ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை கூட மக்கள் தங்களது வீடுகளில் இருந்தே பாதுகாப்பாக தொழுகை செய்து கொண்டாடுமாறு அரசு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாட அனுமதி அளிக்குமாறு பாஜக கட்சியினரும், சில இந்து முன்னணி அமைப்புகளும் தொடர்ந்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அரசு சார்பில் அனுமதி கிடைக்காததால், பல இடங்களில் சிலர் அனுமதியை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் பாஜக இளைஞரணி பொறுப்பாளராக இருந்துள்ளார்.

இவர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதால், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் ஆத்திரம் கொண்டு அருணையும் அவர் நண்பர் கிஷோரையும் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அருணின் படுகொலைக்கு நியாயம் கேட்டு #Justiceforarunkumar என்ற hashtag இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மதரீதியான படுகொலைகளை எந்த மதத்தினர் செய்தாலும் குற்றம்தான். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories

Tech |