Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜக 301 தொகுதி தனித்து முன்னிலை” நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டம்…!!

மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜக மட்டும் 301 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை முதல் அறிவிக்கப்பட்ட முன்னிலை முடிவில் தொடர்ந்து பாஜக முன்னிலையை தக்க வைத்து வருகின்றது. தேசியளவில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் முன்னிலை வகித்ததில் பாஜக மட்டும் தனித்து 298 தொகுதிகளிலும் , அதன் கூட்டணி கட்சிகள்  49 தொகுதிகளிலும் முன்னிலை வகுக்கின்றனர்.

Categories

Tech |